/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : பெரிய ராக்கெட்
/
அறிவியல் ஆயிரம் : பெரிய ராக்கெட்
PUBLISHED ON : அக் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
பெரிய ராக்கெட்
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டை சமீபத்தில் சோதனை செய்தது. இதன் உயரம் 403 அடி. உலகின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பெரிய ராக்கெட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அமெரிக்காவின் நாசா 1969 ஜூலை 16ல் 'சாடர்ன் 5' ராக்கெட்டை அறிமுகப்படுத்தியது. இது நிலவை ஆய்வு செய்யும் 'அப்பல்லோ' திட்டத்துக்காக தயாரிக்கப்பட்டது. மூன்று நிலைகளை கொண்டது. 1.40 லட்சம் கிலோ எடையை தாங்கி செல்லும். மொத்தம் 13 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. இதன் உயரம் 363 அடி. விட்டம் 33 அடி.

