/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:குழந்தை வளர்ச்சி குறைபாடு
/
அறிவியல் ஆயிரம்:குழந்தை வளர்ச்சி குறைபாடு
PUBLISHED ON : டிச 09, 2025 10:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தை வளர்ச்சி குறைபாடு, குறைந்த எடை உள்ளிட்ட காரணங்களால் உலகில் 2023 கணக்கின் படி, ஐந்து வயதுக்கு முன்பே பத்து லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர் என 'தி லான்செட்' ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 1.80 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதில் 2வது இடத்தில் இந்தியாவும் (ஒரு லட்சம் குழந்தைகள்), மூன்றாவது இடத்தில் காங்கோவும் (50 ஆயிரம்) உள்ளன. குழந்தை வளர்ச்சி குறைபாடுக்கு உணவு பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், சுகாதாரமின்மை, போர் உள்ளிட்டவையும் காரணம் என தெரிவித்துள்ளனர்.

