PUBLISHED ON : டிச 08, 2025 12:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இமயமலையின் வான் பகுதியில் 30 ஆயிரம் - 42 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து பார்த்தால் சில சமயம் மூன்று சூரியன்கள் தெரியும். இது ஒரு அரிதான வானியல் நிகழ்வு. இதற்கு காரணம் 'ஒளி விலகல்'.
பொதுவாக இப்பகுதிகள் மைனஸ் 40 - 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட பனிப்பிரதேசம். வளிமண்டலத்தில் உள்ள நீர்த்துளி, பனி படிகங்கள் ஆகியவை ஒளியை வளைத்து பிரதிபலிப்பதால் நடுவில் உண்மையான சூரியனுடன் இருபுறமும் அதன் இரண்டு பிம்பங்களும் சேர்ந்து மூன்று சூரியன் போல காட்சி தரும்.

