உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : நவ 07, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
பூமியின் ஆறாவது பெருங்கடல்
பூமியில் ஏழு கண்டங்கள் உள்ளன. ஐந்து பெருங்கடல்கள் உள்ளன. இந்நிலையில் ஆப்ரிக்க கண்டத்தின் நிலத்தட்டுகள் மெது மெதுவாக இரண்டாக பிரிந்து, அதன் காரணமாக பூமியின் ஆறாவது பெருங்கடல் உருவாகும். இது அடுத்த 5 கோடி ஆண்டுகளுக்குள் நடைபெறும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளை ஒட்டி இந்த பிளவு ஏற்படும். மேற்கில் நுாபியன் நிலத்தட்டும், கிழக்கில் சோமாலியன் நிலத்தட்டும் கடந்த 2.5 கோடி ஆண்டுகளாக இரண்டாக பிளவுபட்டு வருகிறது.
