PUBLISHED ON : ஜன 20, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
ரீசார்ஜ் தேவையில்லாத பேட்டரி
ரூபாய் நாணயம் அளவிலான அணுசக்தி பேட்டரியை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் பெயர் 'பிவி100'. இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும். இதை 50 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்யாமல் பயன்படுத்த முடியும். இது இன்னும் ஆராய்ச்சி அளவில் உள்ளது. எதிர்காலத்தில் அலைபேசிக்கு இந்த பேட்டரியை பயன்படுத்துவற்கான ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அணுசக்தி மின்சாரத்தை அலைபேசி பேட்டரிக்கு பயன்படுத்துவது வெற்றிபெறுமானால், இது எரிசக்தி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
உலக விதைகள் வங்கி
உலக வங்கியை போன்று உலக விதைகள் வங்கி, ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் நார்வே நாட்டுக்கு சொந்தமாக உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் பகுதியில் உள்ளது. இங்கு 210 கோடி விதைகள் சேமிக்கும் வசதி உள்ளது. பேரழிவு ஏற்பட்டால், எதிர்கால உலகுக்கு, இன்றைய உலகின் தாவர வகைகள் பாதுகாத்து தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கடினமான பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டது. கடும் குளிரில் உள்ள இந்த விதைகள், பாதுகாப்பு பெட்டகத்துக்குள் முளைத்து விடாதபடி முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.