PUBLISHED ON : ஜன 27, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
மீத்தேன் எங்கு கிடைக்கும்
ஒரு கார்பன் அணு, நான்கு ஹைட்ரஜன் அணுக்களை கொண்டது மீத்தேன். இது எரிவாயு, மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது. இயற்கையில் வாயு நிலையில் காணப்படும் இது காற்றுடன் கலந்து எரியக்கூடியது. தாவரக்கழிவுகள், நீர் நிறைந்த இடங்கள், எரிமலைகள், கடலின் அடிப்பகுதி வெடிப்புகள், கண்டங்கள் இணையும் இடங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் என பல்வேறு வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. இவை தவிர உலகின் பல இடங்களில் பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் வாயு நிலக்கரி போல பொதிந்துள்ளது.
தகவல் சுரங்கம்
அகலமான அருவி
தென் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில் எல்லையில் ஓடுகிறது இகுயாசு ஆறு. இது பரணா ஆற்றின் கிளை ஆறு. இதன் நீளம் 1,320 கி.மீ. இந்த ஆற்றில் இகுயாசு நீர்வீழ்ச்சி உள்ளது. இது உலகின் அகலமான நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. இதன் அகலம் 2.7 கி.மீ. இந்த அருவியில் 275 இடங்களில் நீர் கொட்டுகிறது. இதன் உயரம் 269 அடி. இகுயாசு நீர்வீழ்ச்சி, இகுயாசு ஆற்றை மேல், கீழ் என இரு பகுதியாக பிரிக்கிறது. ஆற்றின் பெரும்பகுதி பிரேசில் பகுதிகளை நோக்கி தான் பாய்கிறது.

