sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்: தகவல் சுரங்கம்


PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

நீண்ட நேர வானவில்

மழையின்போது வானவில் தோற்றுவது அழகான இயற்கை நிகழ்வு. இது பிற்பகலில் பெய்யும் மழைக்குப் பின் தோன்றும். மழை மட்டும் காரணம் அல்ல. பனிமூட்டம், காற்றில் மிதக்கும் சிற்சில துாசுகள், நீர்த்துளிகள், சூரிய ஒளியும் வானவில் தோன்ற முக்கிய பங்காற்றுகின்றன. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்களில் தெரியும். 2017 நவ. 30ல் சீன தைபேயில் 8 மணி நேரம், 58 நிமிடம் வானவில் தெரிந்தது. இதுதான் உலகில் நீண்டநேரம் தெரிந்த வானவில் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

தகவல் சுரங்கம்

உயரமான வளைவு

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் லுாயிஸ் நகரில் 'கேட்வே ஆர்ச்' தேசியப்பூங்கா உள்ளது. இவ்வளாகத்தில் உலகின் உயரமான வளைவு (ஆர்ச்) உள்ளது. இதன் பெயர் 'கேட்வே ஆர்ச்'. இதன் உயரம், அகலம் 630 அடி. இது துருப்பிடிக்காத இரும்பினால் அமைக்கப்பட்டது. மிசிசிபி ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. 1947ல் இதை வடிவமைத்தவர் அமெரிக்காவின் இரோ சாரினன். இதன் கட்டுமானப்பணி 1963ல் தொடங்கி 1965ல் நிறைவு பெற்றது. 1967 ஜூன் 10ல் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. அமெரிக்காவின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us