உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 24, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலகின் வறண்ட பாலைவனம்
தென் அமெரிக்க நாடான சிலியின் வடக்கில், பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ளது அட்டகாமா பாலைவனம். இதன் நீளம் 1600 கி.மீ. பரப்பளவு 1.05 லட்சம் சதுர கி.மீ., பூமியில் உள்ள துருவப் பகுதி அல்லாத பாலைவனங்களில் மிக வறண்டது. மேலும் பூமியின் பெரிய மூடுபனி பாலைவனமும் இதுவே. இதன் கிழக்கே மழையின் தாக்கத்தைக் குறைக்கும் ஆண்டிஸ் மலைத்தொடரும், மேற்கே குளிர்ச்சியான ஹம்போல்ட் நீரோட்டத்திற்கும் இடையில் இது அமைந்துள்ளதால் மிக வறட்சியான பகுதியாக உள்ளது. இங்கு ஆண்டு சராசரி மழைப்பொழிவு 15 மி.மீ., மட்டுமே.
