PUBLISHED ON : பிப் 28, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
பெரிய பாம்பு
'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என்பர் உலகில் பல்வேறு வகை பாம்பு இனங்கள் வாழ்கின்றன. உலகின் பெரிய பாம்பு அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் பெயர் 'நார்தர்ன் கிரீன் அனகோன்டா'. நெதர்லாந்தின் வனஉயிரின பேராசியர் பிரீக் வாக், நீருக்குள் ஸ்கூபா டைவிங் செய்து, பயமின்றி அதன் அருகில் சென்று படம் பிடித்து இத்தகவலை வெளியிட்டுள்ளார். காரின் டயர் அளவுக்கு இந்த பாம்பின் தடிமன் உள்ளது. மனிதனின் தலை அளவுக்கு இதன் தலை உள்ளது. இதன் நீளம் 26 அடி. இதன் எடை 200 கிலோ.
தகவல் சுரங்கம்
அரிதான நோய் தினம்
உலகில் 7000 விதமான அரிதான நோய்கள் உள்ளன. உலகில் 35 கோடி பேர், இந்தியாவில் 7 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய நோயால் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வலியுறுத்தி பிப். 28ல் அரிதான நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரிதான நோய் என்பதற்கான வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 2,500 பேரில் ஒன்று அல்லது அதற்கும் குறைவான பாதிப்புடன் கூடிய பலவீனமான வாழ்நாள் நோய், கோளாறு என வரையறை செய்துள்ளது.

