உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிலவில் நிலச்சரிவு
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் பல்வேறு நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நிலவில் நிலநடுக்கம் காரணமாக புதிதாக 41 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2009க்குப்பின் நிலவு தொடர்பான 562 ஜோடி முன் / பின் புகைப்படங்களில் 41 இடங்களில்நிலச்சரிவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். இது எதிர்காலத்தில் நிலவில் நிலையான ஆராய்ச்சி மையங்களை அமைப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளனர். 2035க்குள் நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
