/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : குளிப்பதற்கு மெஷின்
/
அறிவியல் ஆயிரம் : குளிப்பதற்கு மெஷின்
PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
குளிப்பதற்கு மெஷின்
துணியை சுத்தம் செய்ய வாஷிங் மெஷின் இருப்பது போல தற்போது குளிப்பதற்கும் மெஷின் வந்து விட்டது. இது 15 நிமிடத்தில் உடலை சுத்தம் செய்கிறது. ஜப்பான் விஞ்ஞானிகள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இதை உருவாக்கியுள்ளனர். 1000 பேர் இதை சோதனை முறையில் பயன்படுத்தினர். விமானி அறை போல இருக்கும் இதில் சாய்ந்து படுத்துக்கொண்டால், வெதுவெதுப்பான நீர் நிரப்பப்படுகிறது. பின் காற்று குமிழிகள் வெடித்து தோல் அழுக்கை சுத்தப்படுத்துகிறது. இது உடலை மட்டுமல்ல மனதையும் சுத்தம் செய்ய உதவுகிறது என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

