PUBLISHED ON : நவ 25, 2025 10:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
விண்கல் வரலாறு
சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் விண்கல் என அழைக்கப்படுகிறது. 2023ன் படி, 13 லட்சம் விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை செவ்வாய் - வியாழன் கோள் இடையே தான் சுற்றுகின்றன. முதன்முதலில் 1801 ஜன. 1ல் விண்கல்லை கண்டுபிடித்தவர் இத்தாலியின் கியூசெப்பே கியாசி. இதன் பெயர் 'சீரெஸ்'. துவக்கத்தில் இது சூரியக்குடும்பத்தை சேர்ந்த ஒரு கோள் என கருதப்பட்டது. பின் இதை விண்கல், குறுங்கோள் வரிசையில் விஞ்ஞானிகள் சேர்த்தனர்.

