உள்ளடக்கத்திற்கு செல்ல

அறிவியல் ஆயிரம் : ஒரு சூரியன்... பத்து லட்சம் பூமி
அறிவியல் ஆயிரம் : ஒரு சூரியன்... பத்து லட்சம் பூமி
PUBLISHED ON : ஆக 31, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம் :
ஒரு சூரியன்... பத்து லட்சம் பூமி
சூரியன் 450 கோடி ஆண்டுகள் பழமையானது. இதன் விட்டம் 14 லட்சம் சதுர கி.மீ., துாரம் உடையது. இதில் 10 லட்சம் பூமிகளை உள்ளடக்கலாம். சூரியன் என்பது ஹைட்ரஜன், ஹீலியத்தால் ஆன ஒளிரும் நட்சத்திரம். பூமியில் இருந்து 15 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரிய ஒளி இல்லாமல் பூமியில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை. எட்டு கோள்கள், விண்கல், வால் நட்சத்திரம் உள்ளிட்டவை சூரியனையே சுற்றி வருகின்றன. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 1.5 கோடி டிகிரி செல்சியஸ். சூரியனுக்கு பூமியை போல திடமான மேற்பரப்பு, நிலவுகள் கிடையாது.
