/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : கோள்களின் அணிவகுப்பு
/
அறிவியல் ஆயிரம் : கோள்களின் அணிவகுப்பு
PUBLISHED ON : ஜன 04, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
கோள்களின் அணிவகுப்பு
சூரியனை வெவ்வேறு பாதையில், வேகத்தில் கோள்கள் சுற்றுகின்றன. இந்த அடிப்படையில் சில நேரம் ஒரே நேர்கோட்டில் சில கோள்கள் வரும் வானியல் நிகழ்வு தோன்றுகிறது. இதன்படி இந்தாண்டு ஜன., இரண்டாவது வாரம் முதல், தினமும் சூரிய மறைவுக்குப்பின் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் கோள்கள் வானில் தெரிவதை பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் ஜன. 17, 18ல் வெள்ளி, சனி பூமிக்கு அருகில் வருவதால் அவை கூடுதல் ஒளியுடன் தென்மேற்கு திசையில் தெரியும். யுரேனஸ், நெப்டியூன் கோள்களும் தெரியும். ஆனால் இதற்கு 'டெலஸ்கோப்' தேவைப்படும்.