/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அடுத்த இரண்டாவது நிலவு
/
அறிவியல் ஆயிரம் : அடுத்த இரண்டாவது நிலவு
PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அடுத்த இரண்டாவது நிலவு
பூமியின் தற்காலிக நிலவாக செப். 29ல் இருந்து சுற்றி வந்த '2024 பி.டி.5' விண்கல், இன்றுடன் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, அதன் 'அர்ஜுனா' விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கு செல்கிறது. அளவு சிறியது என்பதால் பூமியில் இருந்து பார்க்க முடியவில்லை. இதுபோல அடுத்த தற்காலிக நிலவு வருவதற்கு 27 ஆண்டு காத்திருக்க வேண்டும். இந்த விண்கல் பெயர் '2022 என்.எக்ஸ்1'. இது ஏற்கனவே 1981, 2022ல் பூமியின் இரண்டாவது நிலவாக சில நாட்கள் சுற்றி வந்தது. இது மீண்டும் 2051ல் சில நாட்கள் பூமியின் தற்காலிக நிலவாக சுற்றிவரும்.