/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : அதிகரித்த நிலவு
/
அறிவியல் ஆயிரம் : அதிகரித்த நிலவு
PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
அதிகரித்த நிலவு
சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இந்த கோள்களுக்கு தனியாக துணைக்கோள்கள் (நிலவு) உள்ளன.இந்நிலையில் சனி கிரகத்தை சுற்றி வரும் 128 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சனியின் மொத்த நிலவு எண்ணிக்கை 274 என உயர்ந்தது. இரண்டாவது இடத்தில் வியாழன் கோளுக்கு 95 நிலவுகள் உள்ளன. மனிதர்கள் வாழும் பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் (நிலவு) உள்ளது. செவ்வாய்க்கு இரண்டு நிலவு உள்ளது. நெப்டியூன் 16, யுரேனஸ் 28 நிலவுகளை கொண்டுள்ளது. இதில் புதன், வெள்ளி கோள்களுக்கு மட்டும் நிலவுகளே இல்லை.