/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:இரு வகை உயிரினங்கள்
/
அறிவியல் ஆயிரம்:இரு வகை உயிரினங்கள்
PUBLISHED ON : ஜன 04, 2026 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு வகை உயிரினங்கள்
உயிரினங்கள் செல் எனும் மிகச்சிறிய செயல்படும் அலகுகளால் ஆனவை. உயிரினங்களின் உடலின் அனைத்து பணிகளும் இந்த நுண்ணிய செல்களின் மூலமே செயல்படுத்தப் படுகின்றன. இது ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என இருவகைப்படும்.
வெறும் கண்களால் பார்க்க முடியாத, நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்க முடிபவை ஒரு செல் உயிரினங்கள். இதற்கு உதாரணம் அமீபா, பாரமீயம், யூக்ளினா போன்றவை. மனிதர்கள், விலங்குகள் உட்பட பெரும்பாலான உயிரினங்கள் பல செல் உயிரினங்கள். இதற்கு மண்புழு, மீன், தவளை, பாம்பு, புறா, புலி, குரங்கு உள்ளிட்டவை உதாரணம்.

