/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நிறமற்ற வாயு எது
/
அறிவியல் ஆயிரம் : நிறமற்ற வாயு எது
PUBLISHED ON : ஜன 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நிறமற்ற வாயு எது
பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து அதிகமாக உள்ள தனிமம் ஹீலியம். மந்த வாயுக்களில் ஒன்று. இதன் அணு எண் 1. பிரான்சின் பியரி ஜான்சனுடன் இதை இணைந்து கண்டுபிடித்தவர் பிரிட்டனின் நார்மன் லாக்யர். அனைத்து வேதிப் பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.ஐ., ஸ்கேனர், கடலுக்கு அடியில் நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கில் பயன்படுத்தப்படுகிறது. இது நிறமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற வாயு. சூரியனில் மட்டுமல்லாமல், பூமியிலும் ஹீலியம் இருப்பதை 1895ல் ஸ்காட்லாந்தின் வில்லியம் ராம்சே உறுதிபடுத்தினார்.