/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் மன அழுத்தம் தரும் காற்றுமாசு
/
அறிவியல் ஆயிரம் மன அழுத்தம் தரும் காற்றுமாசு
PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
மன அழுத்தம் தரும் காற்றுமாசு
மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.ஆனால் காற்றுமாசு இதில் அதிக பங்கு வகிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றுமாசு முதலில் செல்களை பாதிக்கிறது. பின் உடலில் வளர்சிதை மாற்றம், அறிவாற்றலை பாதித்து மன அழுத்த பாதிப்பை உருவாக்குகிறது. நீண்ட காலம் காற்றுமாசு பகுதிகளில் வசிப்போர், குறிப்பாக சல்பர் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை அதிகளவில் சுவாசித்தவர்கள், மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மக்கள், மன அழுத்த பாதிப்பில் இருந்து விடுபட, காற்றுமாசுவை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.