PUBLISHED ON : ஜன 30, 2024 12:00 AM
நள்ளிரவில் சூரியன்
சூரியனை, பூமி ஒருமுறை சுற்றி வருகையில் அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதின் அடிப்படையில் நள்ளிரவில் சூரியன் தெரியும் இயற்கைச் சம்பவம்நிகழ்கிறது. பூமியின் வட, தென் துருவ பகுதிகளில் உள்ள சில நாடுகள் இது போன்ற நிகழ்வுகளைசந்திக்கின்றன. பூமி சற்று சாய்வாக இருப்பதும் இந்த விந்தைக்கு காரணம். கனடாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் அலாஸ்கா மகாணம், கிரீன்லாந்து,
ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே, ரஷ்யா, சுவீடன் உள்ளிட்ட நாடுகளில் ஜூன் - ஆக. வரை (இடத்தை பொறுத்து) நள்ளிரவிலும் சூரியனை பார்க்கமுடியும்.
தகவல் சுரங்கம்
தியாகிகள் தினம்
இந்திய சுதந்திரம்பெற முக்கிய பங்காற்றியவர் மகாத்மா காந்தி. இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் கூட, ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்நடத்தினார். 'அகிம்சை' கொள்கையை வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். 1948 ஜன.30ல் சுட்டுக் கொல்லப்பட்டார். உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
காந்தியின் நினைவு தினம் (ஜன.30) தியாகிகள்தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்.