உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 17, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
‘சிவப்பு கோள்’ என அழைக்கப்படும் செவ்வாய் கோளில், ‘ஆர்சியா மான்ஸ்’ எனும் எரிமலைக்கு அருகே 1800 கி.மீ., நீளத்துக்கு வெண் மேகம் தோன்றுவதை ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ விண்கலம் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கோடை, வசந்த காலத்தில் தினமும் அதிகாலையில் இந்த மேகம் தோன்றுகிறது. இதன் நீளம் இங்கிலாந்தை விட இரு மடங்கு அதிகம். எரிமலையின் சரிவுகளில் ஈரப்பதம் மேலெழுந்து துாசி துகள்கள் இல்லாமலே, நீராவியானது நேரடியாக பனிக்கட்டியாக உறைந்து மேகமாகிறது. பின் பகல் நேரத்தில், வெப்பம் அதிகரிக்கும் போது ஆவியாகி மறைந்து விடுகிறது.
