உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 30, 2026 12:31 AM

அ நிறம் | அளவு
சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகளை (துணைக்கோள்) உடைய கோள் சனி. 274 நிலவுகள் உள்ளன. இரண்டாவதாக உள்ள வியாழனுக்கு 101 நிலவுகள் உள்ளன. இருப்பினும் வியாழனுக்கு தான் பெரிய நிலவுகள்அதிகம் உள்ளன. சனிக்கு 'டைட்டன்' என்ற ஒரு பெரியநிலவு மட்டுமே உள்ளது.
வியாழனிடம் வலிமையான காந்தப்புலம் இருப்பதால், பெரிய நிலவுகள் நிலைத்திருக்க கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சனியில் அத்தகைய பாதுகாப்பு இல்லாததே, அதன் பெரிய நிலவுகளில் டைட்டன் மட்டும் தனித்து விளங்க காரணமாக உள்ளது.
