/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : நடனமாடும் செடி
/
அறிவியல் ஆயிரம் : நடனமாடும் செடி
PUBLISHED ON : பிப் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
நடனமாடும் செடி
தாவரங்களில் பல வகை உண்டு. இதில் 'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 2 - 4 அடி உயரம் வளரும். இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை. இச்செடியில் உள்ள சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசையிலும் நகர்கிறது. இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது. இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன. இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.