உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 09, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
பூமியில் விலங்குகள் 70 – 80 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம்.
இது முந்தைய கணிப்பை விட 20 கோடி ஆண்டுகள் முந்தையது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்குமுன் 57 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகின என கணிக்கப்பட்டிருந்தது. உலகில் ஒரு இடத்தில் விலங்குகளின் புதைபடிவங்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, அங்கு விலங்குகளே வாழவில்லை என கூற முடியாது. ஆரம்பகால விலங்குகள் மென்மையான உடலமைப்பைக் கொண்டிருந்ததால், அவை புதைபடிவமாக மாறும் சூழல் அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
