PUBLISHED ON : ஆக 13, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோளத்தை' தாங்கிப்பிடிக்கும் பூமியின் மேலோட்டின் அடிப்பகுதி 100 கி.மீ. ஆழத்தில் 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கும். அதன் கீழே மேன்டில் எனும் பகுதி, 3500 டிகிரி செல்சியஸ், பூமியின் 'கோர்' பகுதி 5,000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். எனவே 100 கி.மீ.க்கு கீழே உள்ள அனைத்தும் திரவ நிலையில் உருகித்தான் இருக்கும்.
ஆனால் 20- 30 கி.மீ., ஆழத்தில் வெப்பம் 500 டிகிரி செல்சியஸ் தான். இந்த வெப்பம் அங்கே உள்ள அழுத்தத்தில் பாறைகளை உருக்கப் போதுமானது இல்லை. எனவே தான் சில கி.மீ., ஆழத்தில்கூட பாறைகள் திட வடிவில் இருக்கின்றன.