உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 04, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு அறிவியல், தொழில் நுட்பம் முக்கியம்.
உலகின் முதல் செயற்கைக்கோளை (ஸ்புட்னிக் 1) ரஷ்யா 1957 அக். 4ல் விண்வெளிக்கு அனுப்பியது. இதன் பின் ரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி செயற்கைக்கோள், விண்கலம் அனுப்பின. விண்வெளியை அமைதியான, பயனுள்ள வகையில் பயன்படுத்த உலக நாடுகளிடையே 1967 அக். 10ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இவை இரண்டையும் நினைவுபடுத்தும் விதமாக ஐ.நா,. சார்பில் அக். 4 – 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது. ‘ராக்கெட் புரட்சி’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.
