/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
75 என்பது நீண்ட பயணத்தின் அடையாளம்
/
75 என்பது நீண்ட பயணத்தின் அடையாளம்
PUBLISHED ON : நவ 18, 2025 12:00 AM

தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் சிறப்பிக்கப்பட்டு வரும் 'தினமலர்' நாளிதழ், தன் 75வது ஆண்டில் பயணித்துக்கொண்டு இருப்பது தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
'வசந்த் அண்டு கோ', சென்னையில் முதல் கிளை ஆரம்பித்ததில் இருந்து, இன்று வரை, எங்கள் வியாபார சிறப்பம்சங்களும் விளம்பரங்களும் மக்களை சென்றடைய வைப்பதில் 'தினமலர்' நாளிதழ் பெரும் பங்காற்றி வருவது குறித்து, எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
ஒரு நாளிதழ் என்பதை, வெறும் செய்திகளை மட்டும் வழங்கும் கருவியாக கருதக்கூடாது. அது சமூக மாற்றத்திற்கு ஊக்கமளிப்பதாகவும், பொது மக்களின் குரலாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த ஏழு தசாப்தங்களாக மக்கள் மனங்களில் நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் கட்டியெழுப்பிய சிறப்புடைய பத்திரிகையாக 'தினமலர்' திகழ்கிறது.
அரசியல், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, கலாசாரம் என பல்வேறு துறைகளின் செய்திகளை எளிய தமிழில் நேர்மையான அணுகுமுறையுடன், எப்போதும் மக்களின் முன்னே கொண்டு செல்வதே தினமலரின் சிறப்பம்சமாகும். அதை மிகவும் பொறுப்புடனும், பக்குவத்துடனும் கடந்த 75 ஆண்டுகளாக செய்து வருவது பாராட்டத்தக்கது.
75 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல். ஆனால், அது ஒரு நிறைவு அல்ல. நீண்ட பயணத்தின் ஓர் அடையாளம். முடிவில்லாத நெடிய பயணத்தில், அடுத்த கட்டத்தின் தொடக்கம். தமிழ் மொழியையும், தமிழ் மக்களின் வாழ்க்கை முறையையும், சமுதாய மாற்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில், இன்னும் பல சாதனைகளை 'தினமலர்' படைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த பொற்கால கொண்டாட்டத்தில் 'தினமலர்' உரிமையாளர்களுக்கும், முன்னோடி ஆசிரியர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், அனைத்து ஊழியர்களுக்கும், எப்போதும் அன்புடன் துணை நிற்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் மிக்க மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்செல்வி வசந்தகுமார்
மேனேஜிங் பார்ட்னர், வசந்த் அண்டு கோ

