sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

உண்மையின் ஒளியாக தொடரட்டும் 'தினமலர்' வெற்றிப் பயணம்!

/

உண்மையின் ஒளியாக தொடரட்டும் 'தினமலர்' வெற்றிப் பயணம்!

உண்மையின் ஒளியாக தொடரட்டும் 'தினமலர்' வெற்றிப் பயணம்!

உண்மையின் ஒளியாக தொடரட்டும் 'தினமலர்' வெற்றிப் பயணம்!


PUBLISHED ON : நவ 19, 2025 09:00 AM

Google News

PUBLISHED ON : நவ 19, 2025 09:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில், உண்மை, நேர்மை, பொறுப்பு ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட பாரம்பரிய நாளிதழ் என்ற பெருமையைப் பெற்றுள்ளது 'தினமலர்'.

தவறுகளைத் துணிச்சலுடன் சுட்டிக்காட்டும் 'தினமலர்', நன்மைகளையும், நல்ல திட்டங்களையும் பாராட்டத் தவறுவதில்லை. பத்திரிகை தர்மத்தின் படி, அறம் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தி, நாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்திகளை தருவதோடு, அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், முன்னோடியாக திகழ்கிறது.

நீர்நிலைகளை பாதுகாப்பது முதல் இன்று நவீனமாகியுள்ள கோவையின் வளர்ச்சியிலும் 'தினமலர்' நாளிதழின் பங்களிப்பு இருந்து வருகிறது. தனது பேனாவின் முனையை கூராக்கி, பல மாற்றங்களை கொடுத்து பவள விழா காணும் 'தினமலர்' நாளிதழ் 75 ஆண்டுகளை கடந்து, உயர்ந்து நிற்பது என்பது சாதனை மட்டுமல்ல, வரலாறு.

இந்த சாதனைப் பயணத்தின் பின்னணியில் உழைக்கும் பதிப்பாளர், ஆசிரியர், பணியாளர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நுாற்றாண்டுகள் கடந்தும் உண்மையின் ஒளியாக தொடரட்டும், 'தினமலர்' வெற்றிப் பயணம்.



அன்புடன்,

எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.,

அ.தி.மு.க., கொறடா மற்றும் முன்னாள் தமிழக அமைச்சர்






      Dinamalar
      Follow us