/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை வீட்டுக்கு கொண்டு வரும் நண்பன்... ‛தினமலர்'

PUBLISHED ON : அக் 15, 2025 12:00 AM

என் காலைப்பொழுது 45 ஆண்டுகளாக ‛தினமலர்' நாளிதழ் இன்றி புலர்ந்ததில்லை. உள்ளூர் செய்திகள் முதல், உலக செய்திகள் வரை அனைத்தையும் வீட்டுக்கு கொண்டு வரும் இனி நண்பன்... தினமலர். இப்போது என் பேரப் பிள்ளைகளோடு எனக்கு நேரம் போதவில்லை எனினும், தினமலர் எனும் ஆத்ம நண்பனை ஒருநாள் கூட காணாமல் தவறவிட்டதில்லை!
இப்படி என்னை ஆட்கொண்டிருக்கும் தினமலர் நாளிதழில், ‛இது உங்கள் இடம்' பகுதியில் என் கடிதம் பிரசுரமாகிய நாளை என்னால் மறக்க இயலாது. ‛ஆதிரை வேணுகோபால்' என்ற பெயரை அன்று பார்த்ததும், ‛ஆயிரம் மத்தாப்பூ' மனதிற்குள் பூத்த சந்தோஷம்!
ஒரு சாதாரண வாசகியான என்னை, ‛கொலு போட்டி' நடுவர் ஆக்கியும் தினமலர் அழகு பார்த்திருக்கிறது. தினமலர் இணைப்பாக வந்த ‛அங்காடி தெரு'வின் அட்டையில் நானும், என் கணவரும் இடம்பெற்ற நாளில், வாழ்த்து மழையில் தொப்பலாய் நனைந்தோம்!
நான்... அந்துமணியின் பரம ரசிகை; ‛அந்துமணி பதில்கள்' நூல் படித்தவிட்டு நான் விமர்சனம் எழுத, பதிலுக்கு அவர் எழுதிய கடிதத்தை பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறேன்.
‛அன்பெனப்படுவது நிம்மதிக்காக வாசிப்பது அல்ல... வாசிப்பதால் நிம்மதியாவது!' - இதை வாசகர்களுக்கு செவ்வனே செய்துவரும் தினமலர், நூறாண்டு கடந்தும் சாதிக்க வாழ்த்துகிறேன்.
ஆதிரை வேணுகோபால்,
சென்னை