/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'தினமலர்' வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி
/
'தினமலர்' வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி
PUBLISHED ON : டிச 04, 2025 07:26 AM

மக்களின் குரலாக, சமூகத்தின் கண்ணாடியாக, அறிவின் ஒளியை பரப்பி வரும் 'தினமலர்', தனது 75வது ஆண்டை பெருமையுடன் எட்டியுள்ளது. இது வெறும் நாளிதழின் வளர்ச்சி அல்ல; இது ஒரு தேசத்தின் அறிவு வளர்ச்சியின் வரலாறு!
உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்ல, சிந்தனைகளையும், உற்சாகத்தையும் பகிரக்கூடிய ஊடகமாக 'தினமலர்' விளங்குகிறது. மக்கள் விழித்தால் நாடு வளர்ச்சி அடையும்; அந்த விழிப்புணர்வை விதைக்கிறது 'தினமலர்'.
கல்வியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மாணவர்களின் கனவுகளை பெரிதாக்கி, அவர்கள் எதிர்காலத்துக்கு ஒளிவிளக்காக திகழ்கிறது 'தினமலர்'.
கல்வி விழிப்புணர்வை ஊக்குவிக்க 'தினமலர்' செய்த பணி, தமிழக கல்வி வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். இன்றைய சிறுவன் நாளைய தலைவன்; அந்த தலைமைக்கு விதை 'தினமலர்'.
தமிழ் மக்களின் இதயத்தில் ஒளி, அறிவு, ஒற்றுமை என அனைத்தையும் விதைத்திருக்கிறது 'தினமலர்'.
மனிதநேயத்தின் ஒளிக்கீற்றாக நாள்தோறும் பிரகாசிக்கிறது 'தினமலர்'.
75 ஆண்டுகள் என்ற சாதனை. அது எளிதானது அல்ல. அது, நம்பிக்கை, அர்ப்பணிப்பு, மக்கள் அன்பு மற்றும் மிகுந்த உழைப்பின் விளைவு.
பவள விழா கொண்டாடும் தினமலர் இன்னும் பல நூற்றாண்டுகள் ஒளிரட்டும். எழுத்து வாழும் வரை 'தினமலர்' ஒளிரும்.
'தினமலர்' வாழ்க! தமிழ் வாழ்க! நம்பிக்கையின் ஒளி என்றும் பிரகாசிக்கட்டும்!
'லயன்' டாக்டர் எஸ். பீட்டர்
நிறுவனர் மற்றும் தலைவர், மாதா கல்வி நிறுவனங்கள், சென்னை

