/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
வாசகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளது 'தினமலர்'
/
வாசகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளது 'தினமலர்'
PUBLISHED ON : ஜன 27, 2026 12:51 AM

கடந்த 1951ல், அமரர் டி.வி.ராமசுப்பையரால் துவக்கப்பட்ட 'தினமலர்', இன்று, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்று, தமிழ் சமூகத்தின் குரலாக உயர்ந்துள்ளது. வாசகர்கள் அனைவரும் தினமலரை கொண்டாடுகின்றனர். அவர்கள் தினமலரின் பவள விழா ஆண்டுக்காக வாழ்த்துக்களை அனுப்புகின்றனர். குவியும் வாழ்த்துக்களை தினமலர் தினமும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அவர்களுடைய வாழ்த்துக்கள் தினமலரின் 75 ஆண்டு கால மக்கள் சேவைக்கு அத்தாட்சி. தினமலர் மீது வாசகர்கள் வைத்திருக்கும் அபினாத்திற்கு அத்தாட்சி.
அன்றாட வாசகர்கள் மட்டுமல்லாது பிற ஊடகவியலாளர்களும் வாழ்த்துவது வியப்பு.
பல தலைமுறைகளாக, பல தலைமுறை வாசகர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லி, உத்வேககத்தை அளித்து வரும் தினமலரின் தைரியத்தையும், நேர்மையையும், துணிச்சலையும் வாழ்த்து கடிதங்கள் பாராட்டுவதை நான் பார்க்கிறேன்; தினமலர் வாசகர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்கிறேன்.
அரசியல்வாதிகளும் வாழ்த்தி எழுதுவது ஆச்சரியம் அளிக்கிறது. தினமலர் அவர்களுடைய நம்பிக்கையயும் பெற்றுள்ளது என்பது புரிகிறது.
தினமலரின் 75 ஆண்டு கால பயணம், தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு பொற்கால அத்தியாயம்.
தினமலரின் ஆசிரியர்கள், நிருபர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பே அதன் வலிமைக்கு காரணம். அவர்களை இந்த பவள விழா ஆண்டை முன்னிட்டு எங்கள் நிறுவனம் சார்பாக வாழ்த்துகிறேன். உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள தினமலரின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
- எஸ்.மகாவீர் சந்த் போத்ரா
இயக்குனர், ஒயிட் பயர் டைமண்ட்ஸ் இந்தியா பி.லிட்., சென்னை

