தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தினமலர் பவள விழா/தினமும் 'தலையங்கம் எதிர்பார்க்கிறேன்'

தினமும் 'தலையங்கம் எதிர்பார்க்கிறேன்'

தினமும் 'தலையங்கம் எதிர்பார்க்கிறேன்'


PUBLISHED ON : ஜன 28, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காலை எழுந்தவுடன், பல நாளிதழ்களை படிப்பதை, வழக்கமாகக் கொண்டிருக்கும் நான், முதலில் படிக்கும் நாளிதழ் 'தினமலர்'. தினம் வீடு தேடி வரும் ஒரு மலர் தினமலர். பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும், வாசமுள்ள மலர். அந்த மலரின் வாசனையை, தினமும் முகர்ந்து பார்த்து மகிழும், ஒரு வாசகன் என்ற நிலையில், எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

உள்ளூர் செய்திகள், பல்துறை வல்லுனர்களின், அறிக்கைகள் என படிக்கப் படிக்க விறுவிறுப்பாகவும், ஆர்வத்தை துாண்டும் வகையிலும் செய்திகளும் கட்டுரைகளும் அமைந்திருக்கும். தொடாத துறையும் வராத செய்தியும் தினமலரில் இல்லை. அனைத்தையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான 'என்சைக்ளோபீடியா' எனப்படும் கலைக்களஞ்சியம் தினமலர் நாளிதழ்.

போட்டி நிரம்பியுள்ள பத்திரிகை உலகில், அதுவும் சமூக வலைதளங்கள் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையிலும், 75 ஆண்டுகள் தனித்தன்மையோடு, தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது மட்டுமல்ல, அதிக வாசகர்களைக் கொண்ட நாளிதழ்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கும் தினமலர் நாளிதழுக்கும், மலர்களை மாலையாக்கி, வாசகர்களுக்கு அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் தினமலர் குழுமத்திற்கும் எனது வாழ்த்துகள். பாராட்டுகள்.

மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று, நுாற்றாண்டை கடந்தும், நிலைத்து நிற்க விழைகிறேன். பத்திரிகைகளுக்கு அழகு சேர்ப்பது தலையங்கம். அதையும் இடம் பெறச் செயல்தால் சிறப்பாக இருக்கும். இதுவும் ஒரு எதிர்பார்ப்பு.

அன்புடன்,

எஸ்.செம்மலை

முன்னாள் தமிழக அமைச்சர், அ.தி.மு.க.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us