/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
மாணவர் பயிற்சிக்கு உதவும் 'தினமலர்'
/
மாணவர் பயிற்சிக்கு உதவும் 'தினமலர்'
PUBLISHED ON : மார் 12, 2026 02:50 AM

இடைவிடாமல் 75 ஆண்டுகள் ஊடகச் சேவை ஆற்றும் 'தினமலர்' நாளிதழுக்கு வாழ்த்துகள்.
தினமலர், நாள்தோறும் புதிய தகவல்களால் மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை பிரதிபலிக்கிறது. ஒரு கல்வியாளர் என்ற முறையில், தினமலரின் புதிய, மேம்படுத்தப்பட்ட தகவல்கள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதை, என்னால் உணர முடிகிறது.
விளம்பரங்களையும், ஏராளமான தகவல்களையும் தினமலர் நாளிதழ் வெளியிடுகிறது. மாணவர்களுக்கு பிரத்யேகமான 'பட்டம்' நாளிதழ், மாணவர்களின் அறிவு தேடலுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. செய்திகளை தாண்டி, மாவட்ட வாரியாக வினாடி வினா போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவது பாராட்டுகுரியது.
தினமலர் நாளிதழிலும் சரி, அதன் மாணவர் பதிப்பான பட்டத்திலும் சரி, அவற்றில் வெளியாகும் அறிவியல் மற்றும் வரலாற்றுச் செய்திகள், மாணவர்கள் மட்டுமின்றி கல்வியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றன.
எங்கள் பள்ளியில், தினமலர் நாளிதழ் வெளியிடும் செய்திகளை மையப்படுத்தி, வாரம் இரு முறை, 'செய்தித்தாள் செயல்பாடுகள்' என்ற பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்கின்றனர். அதில், புள்ளி விவரங்கள் சேகரிப்பது, செய்திகளின் தாக்கத்தை கலந்துரையாடுவது, தலைப்புகளில் உள்ள உண்மை தன்மையை விளக்கமாக அறிதல் ஆகியவற்றை மாணவர்கள் செய்கின்றனர். மேலும், தகவல் பலகை அமைத்தல், பட்டிமன்றம் ஆகியவற்றுக்கும் தினமலர் நாளிதழை பயன்படுத்துகிறோம்.
'நகர்ப்புற தூய்மை பணி' என்ற சமூக கடமை பயிற்சிக்கும் தினமலர் ஊன்றுகோலாக உதவுகிறது.
தினமலர் நாளிதழில் தலைப்பு செய்தி முதல் விளையாட்டு செய்திகள் வரை, விளக்கமான தெளிவும், புரிதலும் வாசகர்களுக்கு கிடைக்கிறது. நாட்டு நலனில் அக்கறை கொண்டு வெளியிடும் அனைத்து தகவல்களும் மக்களின் சிந்தனையை தூண்டுவது அருமை.
ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தின் கடமையை சிறப்பாக செய்திடும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் தினமலர் நாளிதழின் சமுதாயப்பணி.
-எஸ்.பிரேமலதா பன்னீர்செல்வம்,
உயர்நிலை முதல்வர், மகாத்மா பள்ளி குழுமம், மதுரை

