/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
/
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

தகவல்களை வழங்க, பிற பிராந்திய மொழி செய்தித்தாள்கள் பல இருந்தாலும், 'தினமலர்' உண்மையிலேயே தனித்து நிற்கிறது.
வெறும் தகவலை மட்டும் தருவதில்லை; நுண்ணறிவுகளையும் அனுமானங்களையும் வழங்குகிறது. இது செய்தித்தாள் அல்ல; ஒவ்வொரு நாளும் பயனுள்ள 8 அல்லது 10 பக்க புத்தகத்தைப் படிப்பது போல் உணர்த்தும்.
பொதுவாக, ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கில செய்தித்தாள்களை படிக்க விரும்புகின்றனர். நானும் என் வாழ்நாளில் பல ஆங்கில செய்தித்தாள்களை படித்திருக்கிறேன். சில ஆண்டுகளாக, முற்றிலும் 'தினமலர்' நாளிதழுக்கு மாறிவிட்டேன்.
சிலர் செய்தித்தாள்களை படிப்பது, நேரத்தை வீணடிப்பதாகச் சொல்கின்றனர். ஏனெனில், அவை பெரும்பாலும் குற்றம், மரணம், விபத்து செய்தியை வெளியிட்டு, விற்பனையை அதிகரிக்க மட்டுமே கவனம் செலுத்துகின்றன.
ஆனால், 'தினமலர்' வேறுபட்டது.
'தினமலர்' நாளிதழை விரும்புவதற்கான காரணம் இங்கே:
* 'தினமலர்' படிக்க எளிதானது.
* தலைப்புச் செய்திகள் விளக்கமானவை மற்றும் ஈர்க்கக்கூடியவை.
* அழகான புகைப்படங்களைக் கொண்டுள்ளது.
* பரந்த அளவிலான மருத்துவ செய்திகள் மற்றும் சாதனைகளை உள்ளடக்கியது.
* தொற்று/நோய் தடுப்பு சுகாதார குறிப்புகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக, மாரடைப்பு, கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் தெரு நாய்களிடம் இருந்து வரும் ரேபிஸ்.
* இது, சமூகத்தின் சிறந்த மருத்துவர்களை விருதுகள் மூலம் அங்கீகரித்து கவுரவிக்கிறது.
'தினமலர்' நாளிதழில் இதய ஆரோக்கியம் பற்றி எழுதினேன்; என் கட்டுரைகள் மில்லியன் கணக்கான வாசகர்களை சென்றடைந்துள்ளன. 'தினமலர்' வெளியீட்டில், 'இதயம் ஒரு கோவில்' என்ற தலைப்பில், ஒரு புத்தகம் எழுதினேன். மரியாதைக்குரிய தலைவர், மறைந்த முதல்வர் மு.கருணாநிதி, அந்தப் புத்தகத்தை தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பும்போதெல்லாம், கூகுள் நோக்கித் திரும்புகிறோம். தமிழ் வாசகர்களுக்கு, 'தினமலர்' ஒரு தமிழ் கூகுள் போன்றது.
'தினமலர்' செய்தித்தாள், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களை வணங்குகிறேன்.
'தினமலர்' வாழ்க!
இப்படிக்கு,
டாக்டர் ஜி.பக்தவத்சலம்,
தலைவர், கே.ஜி., மருத்துவமனை, கோவை.