sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

தமிழர்களிடம் தேசபக்தி வளர்ப்பது 'தினமலர்' நாளிதழ்

/

தமிழர்களிடம் தேசபக்தி வளர்ப்பது 'தினமலர்' நாளிதழ்

தமிழர்களிடம் தேசபக்தி வளர்ப்பது 'தினமலர்' நாளிதழ்

தமிழர்களிடம் தேசபக்தி வளர்ப்பது 'தினமலர்' நாளிதழ்


PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 01, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' என்றாலே மணம் வீசும் மலர்தான் என் நினைவுக்கு வரும். அன்றாட இந்திய நிகழ்வுகள் மட்டுமல்லாது, உலக நிகழ்வுகள் அனைத்தையும், எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மிகத்தெளிவான முறையில் அச்சிட்டு மக்கள் மனங்களில் அறிவு மணம் பரப்பி வரும் நாளிதழ் தினமலர்.

தற்போது, 75வது ஆண்டில் நுழைந்திருக்கும் என் மதிப்பிற்குரிய 'தினமலர்' நாளிதழை, இந்த 'பவள விழா' தருணத்தில் 'செளபாக்யா' குழுமத்தின் சார்பில் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இத்தகைய பெருமைகள் அனைத்தும் 'தினமலர்' நிறுவனரான டி.வி.ராமசுப்பையர் அவர்களையே சாரும். இவர் ஆலமரம் எனில், இம்மரத்தின் விழுதுகள், அயராது பாடுபட்டு வரும் ஊழியர்கள். இவர்களின் பெருமுயற்சியே, 'தினமலர்' நாளிதழின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.

எங்களது 'சௌபாக்யா' குழுமத்தின் விளம்பரங்களை உரிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெருமை, 'தினமலர்' நாளிதழுக்கு எப்போதும் உண்டு. இதற்காக 'தினமலர்' நிறுவனத்தாருக்கு எங்கள் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள். இத்தருணத்தில் எங்களுக்கு பெருமை சேர்த்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன். நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள், எங்கள் 'சௌபாக்யா' கிரைண்டர் ஒன்று வாங்கி, அதற்குரிய தொகைக்கு காசோலை அனுப்பி இருந்தார். அதை நாங்கள் வங்கியில் செலுத்தாமல் வைத்திருந்தோம். இதை அறிந்துகொண்ட கலாம் அவர்கள், 'என் காசோலையை வங்கியில் செலுத்தவில்லை என்றால் கிரைண்டரை திருப்பி அனுப்பி விடுவேன்' என்றார்.

அவரது இந்த உயரிய குணம் அறிந்த 'தினமலர்' நாளிதழ், இந்நிகழ்வை செவ்வனே உலகிற்கு தெரியப்படுத்தியது. மாமனிதர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த குணத்தையும், எங்கள் நிறுவன பொருள் மீது அவருக்கு இருந்த பிரியத்தையும் ஒருசேர வெளிப்படுத்தி இருந்த விதம் மிகுந்த பாராட்டுக்குரியது. 'தினமலர்' பயணப்பட்டு இருக்கும் இந்த 74 ஆண்டுகளை நினைத்துப் பார்க்கையில் பெரும் பிரமிப்பு ஏற்படுகிறது. சுதந்திர இந்தியாவில் துவங்கிய நாளிதழின் பயணம், இன்று வளர்ந்து நிற்கும் இந்தியாவிலும் தொய்வின்றி தொடர்வது பெரும் சாதனை. 'தினமலர்' செய்திகள் அனைத்தும் தமிழர்களுக்குள் தேசபக்தியை வளர்க்கின்றன.

'நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்துறை முக்கியமானது' என்பதை உணர்ந்து, எங்களைப் போன்றவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உற்ற தோழனாய் 'தினமலர்' திகழ்கிறது. தற்போது 74 ஆண்டுகளை கடந்திருக்கும் 'தினமலர்', மேலும் பல ஆண்டுகள் தன் சீரிய சமுதாயப் பணியை தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அந்த வகையில், ஊழியர்கள் உள்ளிட்ட 'தினமலர்' குடும்பத்தினர், சகல செளபாக்கியத்தையும் பெற இறைவனை வேண்டுகிறேன்.

நல்வாழ்த்துகளுடன்...

வெ.வரதராஜன்

இயக்குநர், சௌபாக்யா என்டர்பிரைஸஸ் பி.லிட்.,






      Dinamalar
      Follow us