sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்

/

இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்

இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்

இன்று எங்கள் நிறுவனம் மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' நாளிதழ் மிக முக்கிய காரணம்


PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 26, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்றாடம் புரட்சிமிகு பக்கங்களோடு, வலிமையான தகவல்களை தாங்கி வரும் நாளிதழ் தினமலர்.

'தினமலர்' - இந்த பெயரை சொல்லும்போது; தெளிவு, கருத்தாழம், சொல்ல வேண்டிய கருத்தை தைரியமாக உரைத்தல், அரசியல் வெளிப்படைத்தன்மை, உண்மையை பாகுபாடின்றி மக்களிடம் எடுத்துச் செல்லுதல் என, பல எண்ணங்கள் மனதிற்குள் உலா போகின்றன!

நான் மதுராந்தகத்தில் குடியமர்ந்தபோது, 'தமிழகம் என்னை அரவணைத்தது' என்றால், அதற்கு தமிழ் மொழிதான் முக்கிய காரணம். இதற்கு பேருதவியாய் இருந்தது 'தினமலர்' நாளிதழ். எளிமையான தன் தமிழால் என் தமிழ்ப்பற்றை துாண்டியது தினமலர்.

'தினமலர்' நாளிதழின் தலைப்புச் செய்திகளும், எளிமையான சொற்றொடர்களும் என் தமிழ் பசிக்கு சரியான தீனியாக அமைந்தன. இவற்றின் உச்சமாக, என்னை தமிழில் முதுகலை பட்டம் பெற வைத்ததிலும் 'தினமலர்' நாளிதழுக்கு கணிசமான பங்குண்டு!

இவற்றோடு, 'சலானி ஜுவல்லரி மார்ட்'டுக்கும் தினமலருக்குமான தொடர்பு மிகவும் நெருக்கமானது. ஆம்... என் வியாபார விரிவாக்கத்திற்கு நான் முதலில் நாடியது 'தினமலர்' நாளிதழை தான். எங்கள் தொழில் வளர்ச்சியடைய ஒரு துாண்டுகோலாய் 'தினமலர்' நாளிதழ் திகழ்ந்து வருகிறது. இன்று, 15க்கும் மேற்பட்ட கிளைகளை நிறுவி 'சலானி ஜுவல்லரி மார்ட்' மிகப்பெரிய ஆலமரமாக தழைத்து நிற்க 'தினமலர்' மிக முக்கிய காரணம்.

'சலானி ஜுவல்லரி மார்ட்' உடைய அனைத்துவித சலுகைகள், நகை கண்காட்சிகள் மற்றும் தொழில் சார்ந்த புதுமைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பாலமாக 'தினமலர்' திகழ்கிறது.

மக்கள் மனங்களை செம்மைப்படுத்துவதில் 'தினமலர்' நாளிதழக்கு நிகர் இல்லை. ஆன்மிக மலர் மூலம் மக்கள் மனதில் இறைபக்தியை வளர்க்கும் அதேவேளையில், சிறார்கள் களிப்படைய சிறுவர் மலரை பிரத்யேகமான முறையில் தயார் செய்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் இரண்டு தினமலர், செய்திகளின் குவியலாக ஈர்க்கிறது. உடன்வரும் வாரமலர் பல்சுவை விருந்து படைக்கிறது!

இவற்றோடு, அன்றாட காய்கறி விலை நிலவரம், வேலைவாய்ப்பு தகவல்கள், விளையாட்டு செய்திகள், சர்வதேச கரன்சிகளின் மதிப்பை அறிய உதவும் வர்த்தக செய்திகள் மற்றும் அரசியல் துணுக்குகளை சிறப்பாகத் திரட்டி மக்களுக்கு வழங்குவதில் 'தினமலர்' சிறப்புற செயல்படுகிறது.

நகைக்கடை சங்க தலைவர் என்ற முறையில் சொல்கிறேன்; நகை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் தங்கம் வைரம் சார்ந்த அத்தனை தகவல்களையும் உண்மை மாறாமல் மக்களிடம் எடுத்துச் செல்வதில் தினமலர் முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படி, ஒரு நாளிதழுக்கே உரித்தான அத்தனை சிறப்பு அம்சங்களையும் பெற்று வாசகர்கள் மனதில் சிகரமாய் நிற்கும் 'தினமலர்' நாளிதழுக்கு 'பவள விழா ஆண்டு' வாழ்த்துகளை 'சலானி ஜுவல்லரி மார்ட்' சார்பாக தெரிவிப்பதில் மகிழ்கிறேன். 'தினமலர்' சேவை இதே கம்பீரத்துடன் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.



இப்படிக்கு,

ஜெயந்திலால் சலானி

தலைவர்,

மெட்ராஸ் நகைக்கடைகள் & வைர வர்த்தகர்கள் சங்கம்






      Dinamalar
      Follow us