sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தினமலர் பவள விழா

/

'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை

/

'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை

'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை

'தினமலர்' அரசியல் செய்திகள் வியப்பளிப்பவை


PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 15, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் வெளியாகும் தினசரி பத்திரிகைகளில், 'தினமலர்' நாளிதழ் மற்றவைகளைக் காட்டிலும் வித்தியாசமானது. அதனாலேயே, போட்டி நிறைந்த உலகில், இந்தப் பத்திரிகை 74 ஆண்டுகளைக் கடந்தும் செய்திகளில் மட்டுமல்ல, விற்பனையிலும் முத்திரைப் பதித்து வளர்ந்து நிற்கிறது.

நாளிதழ்களைப் பொறுத்த வரை, செய்திகள் விற்பனைக்குத்தான் என்றாலும், அந்த விற்பனையிலும் கூட ஒரு நேர்மையை வகுத்து, அதன் வழியில் செய்திகளை வெளியிடுவது என்பது, ஒரு சில நாளிதழ்கள் மட்டுமே கடைபிடிக்கும் நடைமுறை. அதில், தினமலருக்கு தனி இடம் உண்டு.

நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களோடு இணைந்து, அது குறித்த சிந்தனைகளை, தேசிய கண்ணோட்டத்தோடு வெளியிடுவதை துவக்க காலம் தொட்டு பின்பற்றி வரும் 'தினமலர்' போன்ற நாளிதழ்கள், அதன் வாசகர்களுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே பெரும் சொத்து.

அரசியல், தொழில், செகண்ட் பிரண்ட் பேஜ் என பல்வேறு தலைப்புகளின் கீழ், ஒவ்வொரு பக்கத்தையும் வடிவமைத்து, முழு மீல்ஸாக வாசகர்களுக்கு படைப்பது அழகு. ஒரு முழுமையான நாளிதழ் எப்படி இருக்க வேண்டுமோ, அவை அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் தினமலரில், 'இந்தப் பகுதியை படிக்கலாம், இதை விடலாம்' என எதையும் வித்தியாசப்படுத்தி பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்துச் செய்திகளையும் நாள் தவறாமல் தருவது, தினமலரின் பலம்.

தமிழக அரசின் அனைத்துத் துறை செய்திகளையும், ஆழமான கருத்தோடு வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தலையாய கடமையாக செய்கிறது 'தினமலர்'. துறை வாரியாக நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் வெளியிடுவதால், அரசு நிர்வாக நடைமுறை பற்றிய அனைத்து விபரங்களையும் 'தினமலர்' வாயிலாக படித்து அறிய முடியும் என்ற நம்பிக்கையை வாசகர்களிடம் விதைத்திருக்கிறது.

சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒன்றுவிடாமல் பிரதிபலிக்கும் 'தினமலர்', ஒவ்வொரு செய்தியிலும் புதிய பரிமாணத்தை எடுத்துச் சொல்லி, 'அட இப்படியும் கூட செய்திகளை எழுத முடியுமா, அதை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமா?' என என்னை பலமுறை வியக்க வைத்திருக்கிறது.

தொழில், லாபம் என்ற தலைப்புகளில் வெளியாகும் பகுதிகளில், வியாபாரம், பங்கு சந்தை, காப்பீடு குறித்த அரிய தகவல்களை செய்திகளாக்கி, அதை அன்றாடம் பிரசுரித்து, 'நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக, நாங்களும் பாடுபடுகிறோம்' என சொல்லாமல் சொல்லும் 'தினமலர்' நாளிதழுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

அரசியல் என்ற தலைப்பிட்டு வெளியாகும் பக்கங்களில் பிரசுரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் புதியவை. முழு நேர அரசியல்வாதியாக இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கே, அந்த பகுதியில் வெளியாகும் செய்திகள் பல, புதிதாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன். அரசியல்வாதிகளுக்கு பல நேரங்களில் அந்த செய்திகள் பெரும் குடைச்சல் கொடுப்பது போலவும் அமையும். சில நேரங்களில் செய்திக்கு அழகூட்டுவதற்காக போடப்பட்டும் வரைபடங்கள் சிலரை வருத்தியிருக்கக்கூடும். அதைக் கூட ஒரு வேடிக்கைக்காக, செய்திக்கு பலம் சேர்ப்பதற்காக சேர்க்கப்படுபவை என நினைத்துக் கொண்டால், அதில் கசப்புகள் இருக்காது. ஒரு சில செய்திகளில், சேர்க்கை சற்றே கூடுதலாக இருந்தாலும், அது சுவைக்காக சேர்க்கப்பட்டவையாக இருக்குமே தவிர, உண்மையின் விலகலாக இருக்காது. இது, தினமலரின் நீண்ட கால வாசகனாக இருந்து, நான் அந்த நாளிதழ் குறித்து உணர்ந்தது.

தினமலர் நாளிதழில் எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போது பேசினாலும், ஒரு அடக்கமும் அன்பும் இருக்கும். அது கூட, அந்த நாளிதழ் கற்றுத் தந்தது தான்.

ஒரு நாளிதழ் 75 ஆண்டை தொடுவது என்பது சாதாரணமான காரியமல்ல. அதற்காக, அன்றாடம் உழைப்பை செலுத்தும் ஊழியர்களே அச்சாணிகள்.

அதேபோல, மனசு மாறாமல், நாளிதழை ஆண்டாண்டு காலமாக ரசித்து வாசிக்கும் என்னைப் போன்ற வாசகர்களை கொண்டிருக்கும் 'தினமலர்', நூற்றாண்டை கடந்தும் தன்னுடைய செய்தி பணியையும், சமூகப் பணியையும் சேர்த்து செய்ய வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

பத்திரிகை பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் நாளிதழ் நிர்வாகத்தினரையும் பாரட்டும் கடமை எனக்கு உண்டு. வாழ்க பல்லாண்டு!



இப்படிக்கு,

ஜெயக்குமார்

அமைப்பு செயலர், அ.தி.மு.க., மற்றும் முன்னாள் தமிழக அமைச்சர்






      Dinamalar
      Follow us