/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
என்னை ஒரு எழுத்தாளராக உருமாற்றம் செய்த 'தினமலர்' நாளிதழை மூச்சுள்ள வரை மறவேன்

PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

மக்களின் மனசாட்சியாய் 75 ஆண்டுகள்; 'தினமலர்' நாளிதழின் பொறுப்புள்ள சேவைக்கு முதலில் தலைவணங்குகிறேன். 'ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது தினமலர்' என்றால் அது மிகையல்ல!
ஒவ்வொரு வாசகர் மீதும் அக்கறை கொண்டு அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து தரும் நாளிதழ் தினமலர். 'நீதியின் பக்கத்திலும், தர்மத்தின் பக்கத்திலும் தினமலர் எப்போதும் நிற்கும்; அன்று போல் இன்றும், இன்று போல் என்றும் அநியாயங்களை தட்டிக் கேட்கும்' என்பதை, தினமலர் வாசகர்களாகிய நாங்கள் அன்றாடம் உணர்கிறோம்.
'நான் வாசக எழுத்தாளராய் 1988ம் ஆண்டு அடியெடுத்து வைத்தது தினமலர் நாளிதழில்தான்' என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறேன். 'என்னை வளர்த்தது, என்னை செதுக்கியது, என்னை ஒரு கட்டுரை எழுத்தாளராக உருமாற்றம் செய்தது தினமலர் தான்' என்பதை என் மூச்சுள்ள வரை மறக்க மாட்டேன்!
'ஒவ்வொரு நாளும் அதிகாலை தினமலர் நாளிதழோடு தான் எங்கள் வாழ்க்கை துவங்குகிறது' என்பதில் எங்களுக்கு பெருமை. 'சிகரம் நோக்கிய தினமலர் நாளிதழின் பயணத்தில் எப்போதும் உடனிருப்போம்' என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு கூறிக் கொள்கிறேன்.
'கோவிலாம்பூண்டி' பொ.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.