PUBLISHED ON : பிப் 18, 2026 02:17 AM

மாணவர்களின் மலராக, மங்கையரின் மலராக, வணிகர்களின் மலராக, நமது இல்லத்தின் மலராக என்றும் மலர்ந்து கொண்டிருக்கும் 'தினமலர்' நாளிதழுக்கு 75வது ஆண்டு வாழ்த்துக்கள்.
சமுதாய அக்கறையில் ஒரு செய்தித்தாளாக உண்மையை என்றைக்கும் எடுத்துரைப்பதில் தினமலரின் அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. வருங்கால இந்தியாவை உலக அளவில் வழிநடத்தப் போகும் நம் இளைஞர்களுக்கு எப்போதும் வழிகாட்டியாய் விளங்குகிறது. இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி, வலிமை மிக்க பாரதத்தை கட்டமைக்கும் பங்கு தினமலருக்கு உள்ளது.
இதை உணர்ந்து, பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு 'ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி வழியாக மன உறுதியை வலிமைப்படுத்துகிறது. கல்வியில் பல உண்டு, கல்லுாரிகளில் விதங்கள் பல உண்டு என்பதை 'வழிகாட்டி' வாயிலாக தெளிவுபடுத்துகிறது. கல்லுாரிகளை தேர்வு செய்வதிலும் 'உங்களால் முடியும்' என்று கல்லுாரி வாழ்க்கையை தொடங்கி வைத்து, மனநிறைவுடன் மாணவர்களின் மலராக இருப்பது என்றும் தினமலரே.
மார்கழியில் கோலப்போட்டிகள் நடத்தி, வெற்றியாளர்களை ஊக்கப்படுத்தி, இன்றும் தமிழர்களின் பண்மைப் போற்றி பாதுகாப்பது, தினமலர்.
இன்றைய காலகட்டத்தில், நமது உணவு முறைகளில் பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களை, அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் வகையில், சிறுதானிய நிறுவனங்களை ஒருமுகப்படுத்தி, சிறுதானிய விழாவாக நகரங்கள் தோறும் நடத்துவது சிறப்பானது.
வணிகர்களுக்கு பக்கபலமாக பயணித்து, மக்களுக்கு பல்வேறு புதுமை படைப்புகளை படம் பிடித்துக் காட்டி, மக்களையும் வணிகர்களையும் இணைத்து மகிழ்வதில், 'ஷாப்பர்ஸ்' திருவிழாவாக நடத்தி, மனங்கள் மலரச் செய்வது தினமலர்.
நமது குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் தரமான செய்திகளை அள்ளித்தந்து முதன்மையான செய்தித்தாளாக மலர்வது, தினமலர் மட்டுமே.
மக்களில் ஒருவராக, மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக, பொது நல ஈடுபாட்டுடன் செய்திகளை கொடுத்து, குறைபாடுகளை உரியவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிவர்த்தி செய்து, அனைவருக்கும் நிறைவான செய்தி மலராக மலர்வது தினமலரின் குணம்.
வாசகர்களின் நம்பிக்கைக்குரிய செய்தித்தாளாக, என்றும் நடுநிலையான செய்திகளை அளிப்பது தினமலர். சிறு வயது முதல் தினமலர் நாளிதழை வாசித்து வருகிறேன். ஏதாவது ஒரு நாள் தினமலரை வாசிக்கவில்லை என்றாலும், மனதளவில் ஒரு குறைபாடாக தோன்றும். அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றதால் தான், இன்றைக்கும் தமிழ் நாளிதழ்களில் ஒரு சிறப்பான இடத்தை பெற்று, நாளிதழின் கடமையை சிறப்புடன் செயல்படுத்துகிறது.
வரும் காலங்களில் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் சிறப்பாக செயல்பட ஊக்கமுடன் பணியாற்றும் நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆர்.ராஜாராம்இயக்குனர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி, கோவை.
