/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தடை செய்யப்பட்ட 8 மூடை குட்கா, 299 மதுபாட்டில்கள் பறிமுதல்: தினமலர் செய்தி எதிரொலியால் நால்வர் கைது

PUBLISHED ON : மே 02, 2024 12:00 AM

சின்னமனுார்: சின்னமனுாரில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 8 மூடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, 299 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பெட்டி கடைகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பள்ளிகளுக்கு அருகில் விற்பனை நடக்கிறது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
செய்தியின் எதிரொலியாக சின்னமனூர் எஸ்.ஐ. சுல்தான் பாட்சா தலைமையிலான போலீஸ் குழுவினர் நேற்று சின்னமனுார் நகரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பில்டிங் சொசைட்டி தெரு, காந்திநகர் காலனி, மின் நகர் பகுதியில் கடைகளில் இருந்த 8 மூடைகளில் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி 299 மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து குபேந்திரராஜா 42, பாலமுருகன் 54, முகமது இஸ்மாயில் 62, மகேந்திரன் 40 ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சின்னமனுார் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை பிற போலீஸ் ஸ்டேசன்களும் பின்பற்றி நடவடிக்கை எடுத்தால், குட்கா விற்பனை கட்டுக்குள் வரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.