/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அறிவித்த சில மணிகளில் 'ஹவுஸ்புல்' தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி
/
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அறிவித்த சில மணிகளில் 'ஹவுஸ்புல்' தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அறிவித்த சில மணிகளில் 'ஹவுஸ்புல்' தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி
தென்காசி வழியாக சிறப்பு ரயில் அறிவித்த சில மணிகளில் 'ஹவுஸ்புல்' தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 19, 2024 12:00 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தாம்பரத்திலிருந்து திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு நேற்று தேர்தல் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்கியது. சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் முழுமையாக முன்பதிவு முடிந்தது.
சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட வாக்காளர்கள் தங்கள் ஓட்டுப்பதிவை செலுத்த வந்து செல்ல வசதியாக தேர்தல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.
இதன் எதிரொலியாக ஏப்ரல் 18, 20 தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கும், தாம்பரத்தில் இருந்து திருச்சி ,மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. ஏராளமான பயணிகள் பயணித்தனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி வழித்தடத்தில் இயங்கும் கொல்லம், பொதிகை, செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் மிகவும் அதிகளவில் இருப்பதால் இந்த வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டுமென தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதனையடுத்து நேற்று இரவு 9:50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி வழியாக இன்று காலை 11:15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் வகையில் 14 ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டும் கொண்ட சிறப்பு ரயிலை இயக்கப்பட்டது.
மறு மார்க்கத்தில் இன்று (ஏப்ரல் 19) இரவு 7:00 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு அதே வழித்தடத்தில் திரும்ப பயணித்து நாளை (ஏப்ரல் 20)காலை 8: 45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த ரயிலும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

