/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கல்லுாரி விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு
/
கல்லுாரி விண்ணப்பம் அவகாசம் நீட்டிப்பு
PUBLISHED ON : மே 21, 2024 12:00 AM

சென்னை : அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பு சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும், 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்பு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, மே 6ம் தேதி துவங்கியது. நேற்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, விண்ணப்ப பதிவு காலத்தை வரும் 24ம் தேதி வரை நீட்டிப்பதாகவும், தரவரிசை பட்டியல் வெளியிடுவது, 24ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

