ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிய தயராகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்
ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிய தயராகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்
PUBLISHED ON : டிச 18, 2025 04:00 PM

அனுன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் நாளை (19/12/2025) தங்க கவசம் சார்த்திக்கொண்டு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவிருக்கிறார்.இதற்கான கடந்த ஒரு வாரகாலமாக தயார் செய்யப்பட்ட வடைகள் மாலைகளாக கோர்க்கப்படும் வேலை நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது.

அனுமன் ஜெயந்தி விழாவின் மிக முக்கிய ஈர்ப்பு 1,00,008 வடைகள் கொண்ட பிரம்மாண்ட மாலை ஆகும். இந்தப் பணிக்காகச் சுமார் 40 சமையல் கலைஞர்கள் கடந்த ஓரு வாரகாலமாக வடை தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் தயரான வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.
அனுமன் ஜெயந்தியான நாளை காலை அதிகாலை 5 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்படும். இந்த மாலை மதியம் வரை ஆஞ்சநேயர் கழுத்தை அலங்கரிக்கும். மதியம் 1 மணி அளவில் வடை மாலை இறக்கப்பட்ட பின் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். சுவாமிக்குச் சாற்றப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகளும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.
பழமையும் புதுமையும் வாய்ந்த இந்தத் தலம், ஆன்மீக மறுமலர்ச்சியின் அடையாளமாக விளங்குவதுடன், ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாகவும் திகழ்கிறது.ஜெயந்தி அன்று அனுமனை தரிசிக்கவும் பிரசாதமாக வடை பெற்றுக்கொள்ளவும் இப்போது முதலே பக்தர்கள் தயராகிவருகின்றனர்.
-எல்.முருகராஜ்.

