/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி எதிரொலி : 30 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு விடிவு
/
தினமலர் செய்தி எதிரொலி : 30 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு விடிவு
தினமலர் செய்தி எதிரொலி : 30 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு விடிவு
தினமலர் செய்தி எதிரொலி : 30 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு விடிவு
PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

திருவேற்காடு, திருவேற்காடு அடுத்த சென்னீர்குப்பம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது.
இங்குள்ள இரண்டாவது வார்டு பள்ளிக்குப்பத்தில், எம்.ஆர்.நகர், மாரியம்மன் கோவில் தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட ஏழு தெருக்களிலும், 350 வீடுகள் உள்ளன.
இங்குள்ள திருவேற்காடு -- பள்ளிக்குப்பம் சாலை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், 1.3 கி.மீ., துாரம் கொண்ட அந்த சாலையில், 270 மீட்டர் துாரம் சென்னீர்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.
ஊராட்சிக்கு சொந்தமான 270 மீட்டர் சாலை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளித்தது.
இதனால், கள்ளிக்குப்பம் வழியாக சென்னீர்குப்பம், திருவேற்காடு, மதுரவாயல், பூந்தமல்லி செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பள்ளத்தில் விழுந்து சேதமடைந்தன.
குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிப்பட்டனர்.
அதேபோல், அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்கள் குறித்த நேரத்தில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது.
சாலை படுமோசமாக உள்ளதால், தனியார் கார் மற்றும் ஆட்டோ சவாரி வர தயங்கினர்.
இது குறித்து, கடந்த டிசம்பரில், நம் நாளிதழில், படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, ஊராட்சி நிர்வாகம் அங்கு சாலை அமைக்க முடிவு செய்தது. அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன், 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தார்ச்சாலை அமைத்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, 30 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்த, நம் நாளிதழ் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

