/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
சேத்தியாத்தோப்பில் வேகத்தடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
/
சேத்தியாத்தோப்பில் வேகத்தடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
சேத்தியாத்தோப்பில் வேகத்தடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
சேத்தியாத்தோப்பில் வேகத்தடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 30, 2024 12:00 AM

சேத்தியாத்தோப்பு: வி.கே.டி., சாலையில் சேத்தியாத்தோப்பு அருகே வேகத்தடையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தினமலர் நாளிழில் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக, வேகத்தடை அகற்றப்பட்டது.
விக்கிரவாண்டி-தஞ்சாவூர் புதிய பைபாஸ் சாலை நங்குடி அருகே வேகத்தடையால் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்திற்குள்ளாயினர்.
இது குறித்து, படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, நங்குடி அருகே இருந்த வேகத்தடையை அகற்றி அந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் பேரிகார்டு பிரதிபலிப்பான் ஆகியவற்றை அமைத்தனர்.