/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
நீரில் மூழ்கி மூவர் இறப்பு எதிரொலி; 70 இடங்களில் எச்சரிக்கை பலகை ; தினமலர் செய்தி எதிரொலி

PUBLISHED ON : மே 31, 2024 12:00 AM

சூலுார்:சுல்தான்பேட்டை அருகே குட்டையில் மூழ்கி மூவர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, 70 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை அடுத்த போகம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், 44, இவரது மகள் தமிழ்செல்வி, 15, மணிகண்டனின் அண்ணன் மகள் புவனா, 13 ஆகிய மூவரும், கடந்த, 26 ம்தேதி அதே பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்ற போது, நீரில் மூழ்கி இறந்தனர்.
கடந்த மாதம் தொண்டாமுத்தூர் பகுதியில் தடுப்பணை நீரில் மூழ்க்கி மூவர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆபத்தான நீர் நிலைகள் மற்றும் கல்குவாரிகளுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்க ஊராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி இருந்தார்.
ஆனாலும், சூலுார், சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள ஆபத்தான நீர் நிலைகளுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.இது குறித்து, கடந்த ஏப்., 30 ம் தேதி நமது தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப் பட்டிருந்தது.
எச்சரிக்கை பலகை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால், உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது.
இதையடுத்து, சுதாரித்து கொண்ட சுல்தான்பேட்டை ஒன்றிய நிர்வாகம், ஆபத்தான, ஆழமான நீர்நிலைகள் உள்ள , 70 இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போகம்பட்டி உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கும் பணி துவங்கியுள்ளது.