/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி
/
மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி
மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி
மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஆக 21, 2024 12:00 AM

சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலராக, தாசில்தார் நிலையில் அலுவலரை சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் நியமித்துள்ளார்.
சிவகங்கை மாற்றுத்திறனாளி அலுவலகத்தின் கீழ் மாவட்ட அளவில் 27,000 உறுப்பினர்கள் அட்டை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அரசு மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி, உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
மாவட்ட அலுவலர் பணியிடம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக காலியாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் உலகநாதன் கூடுதல் பொறுப்பாக சிவகங்கையை கவனித்து வந்தார். இதனால், இத்துறை சார்ந்த கலெக்டர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தும் கூட்டம் நடத்தப்படவில்லை.
நலத்திட்ட உதவிகள் முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல்வரின் விருதை சிவகங்கை கைவிட்டுவிட்டது என ஆக., 15 தினமலரில் செய்தி வெளியானது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக சிவகங்கை மாற்றுத்திறனாளி அலுவலர் இன்றி, நலத்திட்ட பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, சிவகங்கை தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.பாலகிருஷ்ணனை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக கலெக்டர் ஆஷா அஜித் நியமனம் செய்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை (எண்:226) நில எடுப்பு தாசில்தார் பி.பஞ்சவர்ணம், சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

