/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு *தினமலர் செய்தி எதிரொலி
/
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு *தினமலர் செய்தி எதிரொலி
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு *தினமலர் செய்தி எதிரொலி
கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு *தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

சென்னை:நம் நாளிதழில்வெளியான செய்தியை தொடர்ந்து, அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்துள்ளதாக தமிழக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் கொசஸ்தலையாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சேதம் ஏற்பட்டு, குடிநீர் வீணாவதாக நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இது, தமிழக குடிநீர் வாரிய இயக்குனர் தட்சிணாமூர்த்தி கவனத்திற்கு சென்றது.
கோடைகாலத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவசர கதியில் நேற்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு குழாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தை சேர்ந்த ஒரு ஆழ்துளை கிணறு, வன்னிப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் உள்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, 2023 டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ளத்தால், ஆற்றில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணறுகளும் நீரில் மூழ்கி இருந்தன. படிப்படியாக தற்போது தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.
ஆழ்துளை கிணற்றின் உடைப்பு ஏற்பட்ட இரும்பு குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்தப்பட்டு உடைப்பு சரி பார்க்கப்பட்டு, 2ம்தேதி முதல் குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

