PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: து.அம்பலகாரன்பட்டி ரேஷன் கார்டுதாரர்கள் பல கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலையை கடந்து சென்று பொருட்கள் வாங்கினர்.
அதனால் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக ரூ.9.77 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது.
இதில் பி.டி.ஓ., உலகநாதன், ஊராட்சி தலைவர் அயூப்கான், விவசாய சங்க தாலுகா செயலாளர் ராஜேஷ்வரன், மா. கம்யூ., தாலுகா செயலாளர் கண்ணன், சி.ஐ.டி.யு., கட்டட சங்க தலைவர் மணவாளன் பங்கேற்றனர்.