/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தெரு விளக்குகள் 'பளீச்' தினமலர் செய்தி எதிரொலி
/
தெரு விளக்குகள் 'பளீச்' தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

தேனி, : தேனி நகராட்சிக்குட்பட்ட ஜவஹர் மெயில் தெருவில் பல நாட்களாக எரியமால் இருந்த மின் விளக்குகள் தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டு பளிச்சிடுகின்றன.
தேனி அல்லிநகரம் நகராட்சி 22 வது வார்டில் ஜவஹர் மெயின் தெரு அமைந்துள்ளது. இந்த தெரு தேனி நகர்பகுதியையும், புது பஸ் ஸ்டாண்டையும் இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. மேலும் சமதர்மபுரத்தில் உள்ள காமராஜர் பூங்காவிற்கு வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இத் தெருவினை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த தெருவில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல்இருள் சூழ்ந்து இருந்தது. இதனால் பெண்கள் அச்சமடைந்தனர். ரோட்டில் உள்ள வேகத்தடை பள்ளங்களில் டூவீலர்களில்வருவோர் தடுக்கி விழுவது தொடர்ந்தது. இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் 'மின்விளக்குகள் எரியாததால் இருளில் மூழ்கும் தெருக்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக தெருவிளக்குகள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

